மணமகள் வேறு உடை அணிய அறைக்கு சென்ற போது பின்னாடி சென்று வாலிபர் செய்த கொடூரம்...!

மணமகள் வேறு உடையை அணிந்து கொள்ள மணமகள் அறைக்கு சென்றார்.பின்னாடி சென்று வாலிபர் அந்த பெண்ணை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு கொலை செய்தார்.

Update: 2022-04-30 04:42 GMT
மதுரா

உத்தரபிரதேச மாநிலம் மதுராவை சேர்ந்தவர் அந்த இளைஞர்.அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை மிக தீவிரமாக காதலித்து வந்துள்ளார். ஆனால், அந்த பெண்ணுக்கு முபாரிக்பூர் கிராமத்தில் நௌஜீல் பகுதியில் வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் ஆகிவிட்டது.. முகூர்த்த நாளும் குறிக்கப்பட்டுவிட்டது. காதலிக்கு நிச்சயம் ஆன விஷயம் தெரிந்ததில் இருந்து, இளைஞர் அதிர்ரச்சியில் இருநத்ர்.

கடுமையான மன உளைச்சலுக்கும் ஆளானார்.காதலி தன்னை விட்டு போய்விட்டார், இன்னொருத்தருடன் கல்யாணம் ஆக போவதாக அழுது கொண்டே புலம்பி வந்துள்ளார்.. இப்படிப்பட்ட சூழலில்தான், திருமண நாளும் வந்தது. தடபுடலான ஏற்பாடுகளை மணமக்கள் சார்பில் மண்டபத்தில் செய்து கொண்டிருந்தார்கள். மண்டபத்தில் உறவினர்கள், நண்பர்கள், ஊரே கூடியிருந்தனர். மணமக்களுக்கு வரவேற்பு நடந்து முடிந்தது.மணமகள் வேறு உடையை அணிந்து கொள்ள மணமகள் அறைக்கு சென்றார்.அந்த நேரம் பார்த்து, அந்த இளைஞர், மண்டபத்திற்குள் வெறித்தனத்துடன் நுழைந்தார்..

மணமகள் அறைக்கு காதலி சென்றபோது, பின்னாடியே சென்ற இளைஞர், கையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து காதலியை சரமாறியாக சுட்டார். இதில் சம்பவ இடத்திலேயே மணமகள் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார்.,.. துப்பாக்கி சத்தம் கேட்டவுடன் உறவினர்கள் அலறி அடித்து கொண்டு சம்பவ இடத்திற்கு ஓடினார்கள்.. ஆனால், அதற்குள் மணமகள் இறந்துவிட்டார்.

இதுகுறித்து ஏன்ஐ-யிடம் பேசிய பாதிக்கப்பட்ட பெண்ணின் அப்பா குபி ராம் பிரஜாபதி சொல்லும்போது, "என் மகள் திருமண சடங்கு முடிந்து மணமகள் அறைக்கு சென்றபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வந்து சுட்டுக்கொன்றுவிட்டார். இதை என்னால் நம்பவே முடியவில்லை" என்று அழுது கொண்டே சொன்னார்.. மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் அப்பா, போலீசுக்கு சென்று புகாரும் அளித்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக மாவட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

போலீசார் காதலன் அனீஷ் என்பவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்