பஞ்சாப்பில் இரு பிரிவினருக்கு இடையே கடுமையான மோதல் - கற்களை வீசி தாக்கியதால் பரபரப்பு

பஞ்சாப்பில் இரு பிரிவினர் ஒருவருக்கொருவர் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-04-29 11:48 GMT
பாட்டியாலா,

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் காளியம்மன் கோவில் அருகே இரு பிரிவினர் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. காளிஸ்தான் அமைப்பை சேர்ந்த ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பவர்கள் இடையே மோதல் நிலவியது. 

தொடக்கத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர்கள், சிறிதுநேரத்தில் கைகலப்பில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் ஒருவரை ஓருவர் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார், நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர வானை நோக்கி துப்பாக்கியால், சுட்டனர். இதனால், அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. 

இந்த தாக்குதலில் நான்கு பேர் படுகாயமடைந்து இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அம்மாநில முதல் மந்திரி பகவந்த் மான் கூறும்போது, "பஞ்சாப்பில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது வருத்தமளிக்கிறது. மாநிலத்தில் பொது அமைதி மற்றும் சகோதரத்துவம் காக்கப்பட வேண்டும். இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க காவல்துறை கண்கானிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்" என்று முதல் மந்திரி கூறினார்.  

மேலும் செய்திகள்