கடலோர பாதுகாப்பில் நம்பிக்கை அளிக்கும் கடற்படை - ராஜ்நாத் சிங் பாராட்டு

தேசத்தின் நலனுக்காகவும், பாதுகாப்புக்காகவும் செயல்படும் கடற்படை வீரர்களின் அற்பணிப்பு அலாதியானது என ராஜ்நாத் சிங் பாராட்டினார்.

Update: 2022-04-29 11:24 GMT
புதுடெல்லி,

டெல்லியில் நடைபெற்ற கடற்படை தளபதிகள் மாநாட்டின் நிறைவு விழாவில் பங்கேற்ற மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், கடலோர பாதுகாப்புப்படை தளபதிகளை சந்தித்து உரையாடினார். அப்போது பேசிய அவர், தேசத்தின் நலனுக்காகவும், பாதுகாப்புக்காகவும் செயல்படும் கடற்படை வீரர்களின் அற்பணிப்பு அலாதியானது என்றார்.

39 நட்பு நாடுகள் பங்கேற்ற மிலான் கூட்டுப்பயிற்சிகளை வெற்றிகரமாக நடத்தி முடித்ததற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட அவர், போதைப் பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளையும், தமிழகம் மற்றும் ஆந்திராவில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது துரிதமாக செயல்பட்ட கடற்படையின் மீட்புப் பணிகளையும் குறிப்பிட்டு பாராட்டினார். 

கடல்சார் வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் நாட்டு நலனில் இந்திய கடற்படையின் பங்கு உறுதியாக இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். மேலும் ஆத்மனிர்பார் பாரத் திட்டத்தின் மூலம் கடற்படையின் கடற்படையின் மூலதன பட்ஜெட்டில் 64 சதவீதம் வரை மத்திய அரசு முதலீடு செய்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.  

மேலும் செய்திகள்