சவால்களை வாய்ப்புகளாக மாற்றும் தனித்துவமான கலை அமித்ஷாவிடம் உள்ளது - தேவேந்திர பட்னாவிஸ்
அமித்ஷாவின் வாழ்க்கையை விவரிக்கும் புத்தகம் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது
மும்பை,
மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா பற்றிய புத்தக வெளியீட்டு விழா மும்பையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில், மராட்டிய மாநில பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அமித் ஷா(57 வயது) பற்றிய புத்தகத்தை வெளியிட்டார். அவரது பணி நெறிமுறைகளைப் பாராட்டினார்.
'அமித் ஷா அனி பஜபச்சி வாச்சல்' என்ற தலைப்பில் மராத்தி மொழியில் புத்தகம் வெளியாகியுள்ளது. டாக்டர் அனிர்பன் கங்குலி மற்றும் சிவானந்த் த்விவேதி ஆகியோரால் முதலில் எழுதப்பட்ட இந்த புத்தகம், டாக்டர் ஜியோஸ்த்னா கோல்ஹட்கர் என்பவரால் மராத்தியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
இது அமித்ஷாவின் வாழ்க்கை மற்றும் அரசியல் பயணத்தை விவரிக்கிறது.பாரதிய ஜனதா கட்சியை கட்டியெழுப்புவதில் அமித்ஷா ஆற்றிய பங்களிப்பு புத்தகத்தில் உள்ளது. பாரதிய ஜனதா கட்சியை உலகின் மிகப்பெரிய அரசியல் அமைப்பாக மாற்ற அவர் ஆற்றிய பங்களிப்பு புத்தகத்தில் உள்ளது.
புத்தகத்தை வெளியிட்டு பேசிய பட்னாவிஸ், அமித் ஷாவை பாராட்டினார். அவர் பேசியதாவது:-
“அமித்ஷாவின் கூர்மையான அரசியல் புத்திசாலித்தனம் மற்றும் தேர்தல்கள் பற்றிய ஆழமான புரிதலை பாராட்ட வேண்டும்.
கடின உழைப்பு, தியாகம் மற்றும் வலுவான தேசியவாதம் ஆகியவை அமித்ஷாவின் தன்மையை வரையறுக்கின்றன.
சவால்களை வாய்ப்புகளாக மாற்றும் தனித்துவமான கலை அமித்ஷாவிடம் உள்ளது. ஷாவின் ஊக்கமளிக்கும் பயணம் புதிய தலைமுறைக்கு வழிகாட்டும்.
உத்தரபிரதேசத்தை விரிவாக ஆய்வு செய்தவர் அமித்ஷா, அதனால் தான், இறுதியில், 2014 பொதுத் தேர்தலில் நாங்கள் (பாஜக) 80 மக்களவைத் தொகுதிகளில்73 (கூட்டணிகளுடன் சேர்ந்து) வென்றோம்.”
இவ்வாறு பேசினார்.