டெல்லியில் புதிதாக 1,204 பேருக்கு கொரோனா பாதிப்பு - ஒருவர் உயிரிழப்பு

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,204 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-04-26 17:10 GMT
கோப்புப்படம்
புதுடெல்லி, 

டெல்லியில் மறுபடியும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இந்த வாரத்தில் ‘ஆர் வேல்யூ’ என்று அழைக்கப்படுகிற கொரோனா பரவல் விகிதம் 2.1 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,204 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் டெல்லியில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மொத்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 18,77,091 ஆக உயர்ந்துள்ளது.

தொற்று பாதிப்பு காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். டெல்லியில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26,169 ஆக உள்ளது. அதே சமயம் டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 863 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்