'என் மரணம் உனக்கு திருமண பரிசு' என்று சுவரில் எழுதிவிட்டு தற்கொலை செய்து கொண்ட காதலன்
சத்தீஸ்கரில் தான் காதலித்து வந்த பெண் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டதால் மனமுடைந்த இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
ராய்பூர்,
சத்தீஸ்கர் மாநிலம் பலோட் மாவட்டத்தில் தான் காதலித்து வந்த பெண் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டதால் மனமுடைந்த இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அந்த இளைஞர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில அந்த பெண்ணிற்கு வேறு ஒருவருடன் திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருப்பதை அறிந்து, மிகவும் வேதனையடைந்த அந்த் இளைஞர் மன உளைச்சலுக்கு ஆளானார்.
இதையடுத்து அந்த இளைஞர் தன் அறையின் சுவரில், 'என் மரணம் உனக்கு திருமணப் பரிசு, ஐ லவ் யூ' என்று கரியால் எழுதியுள்ளார். பின்னர் தனது அறையில் கயிற்றைத் தொங்கவிட்டு கழுத்தில் போடுவதை வீடியோ எடுத்த அவர், அந்த வீடியோவை தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக பதிவிட்டு அதன்பின்பு தற்கொலை செய்து கொண்டார்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பலோட் டிஎஸ்பி பிரதீக் சதுர்வேதி தெரிவித்தார். வாட்ஸ்அப்பில் அந்த நபர் பதிவேற்றிய வீடியோ குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் விவரங்கள் கிடைத்ததும் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.