"புதுச்சேரியின் வளர்ச்சி இனி வேகம் எடுக்கும்" - புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் வருகையால் புதுச்சேரியின் வளர்ச்சி வேகம் எடுக்கும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

Update: 2022-04-24 15:03 GMT
புதுச்சேரி,

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அரசு முறைப் பயணமாக இன்று புதுச்சேரி வந்துள்ளார். புதுச்சேரி கம்பன் கலையரங்கில் புதுச்சேரி அரசு சார்பில் பல்வேறு புதிய நலத்திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில கலந்து கொண்டு பேசிய, புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், புதுச்சேரி எல்லாவிதத்திலும் முன்னேறிய மாநிலமாக மாறுவதற்கு மத்திய அரசு உறுதுணையாக இருப்பதாக தெரிவித்தார். மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி புதுச்சேரி மாதிரி மாநிலமாக உயரும் என்று அவர் குறிப்பிட்டார். 

மேலும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் வருகையால் புதுச்சேரியின் வளர்ச்சி வேகம் எடுக்கும் என்று கூறினார். எதிர்ப்பவர்கள் புதுச்சேரியின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்று கூறினார்.

மேலும் செய்திகள்