டெல்லி போன்ற நகரை கூட உங்களால் கையாள முடியவில்லை: அமித்ஷா மீது சரத்பவார் பாய்ச்சல்

மத கலவரத்தில் இருந்து டெல்லியை பாதுகாக்க அமித்ஷா தவறிவிட்டதாக சரத்பவார் குற்றம்சாட்டி உள்ளார்.

Update: 2022-04-24 13:52 GMT
மும்பை,

மத கலவரத்தில் இருந்து டெல்லியை பாதுகாக்க அமித்ஷா தவறிவிட்டதாக சரத்பவார் குற்றம்சாட்டி உள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் கோலாப்பூரில் நடந்தது. கூட்டத்தில் அந்த கட்சியின் தலைவர் சரத்பவார் பேசியதாவது:- கடந்த சில நாட்களுக்கு முன் டெல்லி மதக்கலவரத்தால் பற்றி எரிந்தது. டெல்லி, முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் கீழ் உள்ளது. 

ஆனால் அதன் போலீஸ் துறை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் கீழ் உள்ளது. மத கலவரத்தில் இருந்து டெல்லியை பாதுகாக்க அமித்ஷா தவறிவிட்டார். டெல்லியில் எதாவது நடந்தால் அது உலகம் முழுவதும் தெரிகிறது.

டெல்லியை ஒற்றுமையாக்கவும், பிளவுபடாமலும் வைக்க அமித்ஷா நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும். ஆனால் அவர் அதில் தோல்வி அடைந்துவிட்டார். உங்களிடம் அதிகாரம் உள்ளது. ஆனால் டெல்லி போன்ற நகரை கூட உங்களால் கையாள முடியவில்லை” என்றார். 

மேலும் செய்திகள்