ஜம்மு-காஷ்மீர் : தனது சிலையை உருவாக்கிய சிற்பியை சந்தித்தார் பிரதமர் மோடி
தனது சிலையை உருவாக்கிய சிற்பியை பிரதமர் மோடி சந்தித்தார் .
ஸ்ரீநகர்,
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காஷ்மீரின் சம்பா மாவட்டத்துக்குட்பட்ட பாலி பஞ்சாயத்தில் சிறப்பு கிராமசபை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
தேசிய பஞ்சாயத்து ராஜ் தின கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்கு இன்று பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீர் சென்றார் .பிரதமர் மோடி காஷ்மீருக்கு ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்..
இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் , சம்பா மாவட்டத்தில் உள்ள பாலி கிராமத்தில் பிரதமர் மோடியின் சிலை அமைக்கப்ட்டுள்ளது , தனது சிலையை உருவாக்கிய சிற்பியை பிரதமர் மோடி சந்தித்தார் .