லடாக்கில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவு
லடாக்கின் கார்கில் பகுதியில் இன்று மதியம் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.
கார்கில்,
லடாக்கில் இன்று மதியம் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவானதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
இன்று மதியம் 2.53 மணியளவில் லடாக்கின் கார்கில் பகுதியிலிருந்து வடக்கு வடகிழக்கில் 195 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையம் பூமியின் மேற்பகுதியிலிருந்து 30 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.