இந்திய மாணவர்கள் பாகிஸ்தானில் மேற்படிப்பு படிக்க வேண்டாம்: யூஜிசி எச்சரிக்கை
இந்திய மாணவர்கள் பாகிஸ்தானில் மேற்படிப்பு மேற்கொள்ள வேண்டாம் என்று யூஜிசி அறிவுறுத்தியுள்ளது.
புதுடெல்லி,
இந்திய மாணவர்கள் பாகிஸ்தானில் மேற்படிப்பு மேற்கொள்ள வேண்டாம். அங்கு பெறும் பட்டம் இந்தியாவில் செல்லுபடியாகாது என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (ஏஐசிடிஇ) ஆகியன தெரிவித்துள்ளன.
இந்தியர்களோ அல்லது வெளிநாடு வாழ் இந்தியர்களோ பாகிஸ்தானில் மேற்படிப்பு பயின்றால் அவர்களது பட்டம் இந்தியாவில் செல்லாது. மேலும் இந்தியாவில் அவர்கள் வேலைவாய்ப்பு பெறவும் முடியாது என யூஜிசி தெளிவுபடுத்தியுள்ளது.
இருப்பினும், பாகிஸ்தானில் உயர்கல்வி பயின்ற புலம்பெயர்ந்த இந்தியர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளின் சான்றிதழ் அங்கீகரிக்கப்படும். அவர்களுக்கு இந்தியாவில் வேலைவாய்ப்பும் வழங்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.