இந்தியாவில் மேலும் 2,527- பேருக்கு கொரோனா - ஒரே நாளில் 33 பேர் உயிரிழப்பு

கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 15079- ஆக உயர்ந்துள்ளது.

Update: 2022-04-23 03:49 GMT
Photo Credit: PTI
புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. தொற்று பாதிப்பு தொடர்ந்து வருவதால், பல மாநிலங்களில் மீண்டும் முகக்கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. தொற்றின் 4-வது அலை பரவல் ஏற்பட்டு விட்டதோ என அஞ்சும் அளவுக்கு தொற்று பாதிப்பு பல்வேறு மாநிலங்களில் சீரான அளவில் உயர்ந்து வருகிறது. 

நாட்டில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு; - இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,527- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 33- பேர் உயிரிழந்தனர்.  கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 15079- ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனாவில் இருந்து ஒரே நாளில் 1,656- பேர்  குணம் அடைந்தனர். குணம் அடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 16 ஆயிரத்து 068-ல் இருந்து 4 கோடியே 25 லட்சத்து 17 ஆயிரத்து 724- ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 187.46 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.  கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 0.56 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. 

மேலும் செய்திகள்