இந்திய கடலோர காவல்படையில் 'உர்ஜா பிரவாஹா' என்ற புதிய கப்பல் சேர்ப்பு
'உர்ஜா பிரவாஹா' என்ற கப்பல் இந்திய கடலோர காவல்படையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
கொச்சி,
இந்திய கடலோர காவல்படையில் புதிதாக 'உர்ஜா பிரவாஹா' என்ற கப்பல் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த கப்பல் கொச்சியில் உள்ள இந்திய கடலோர காவல்படையில் சேர்க்கப்படுகிறது. 36 மீட்டர் நீளம் கொண்டது மற்றும் சரக்கு கப்பல் எரிபொருள், விமான எரிபொருள் மற்றும் நன்னீர் ஆகியவற்றை கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பல், கடலில் இந்திய கடலோர காவல்படையின் செயல்பாட்டு திறனை நிச்சயமாக மேம்படுத்தும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.