மராட்டியத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு-புதிதாக 121 பேருக்கு தொற்று
மராட்டியத்தில் குறைந்து இருந்த கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
மும்பை
மராட்டியத்தில் குறைந்து இருந்த கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இன்று மாநிலத்தில் புதிதாக 121 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. புதிதாக உயிரிழப்பு எதுவுமில்லை. மாநிலத்தில் இதுவரை 78 லட்சத்து 76 ஆயிரத்து 503 பேர் பாதிக்கப்படடுள்ளனர்.
இதில் 77 லட்சத்து 27 ஆயிரத்து 855 பேர் குணமாகி உள்ளனர். தற்போது மாநிலத்தில் சிகிச்சை பெறுேவார் எண்ணிக்கை 817 ஆக உயர்ந்து உள்ளது. மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 47 ஆயிரத்து 831 பேர் உயிரிழந்து உள்ளனர். தலைநகர் மும்பையில் புதிதாக 68 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.