இங்கிலாந்து முதலீடுகளை இந்தியா வரவேற்கிறது - பிரதமர் மோடி
பிரதமர் மோடி மற்றும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
புதுடெல்லி,
2 நாள் அரசு முறை பயணமாக இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் நேற்று (21ம் தேதி) இந்தியா வந்தார். இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பிரதமர் மோடியை சந்தித்து முக்கிய பேச்சு நடத்தினார். இந்த பேச்சில் இருநாட்டு முக்கிய உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர். முன்னதாக அவருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
பிரதமர் மோடி மற்றும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
இந்தநிலையில் பிரதமர் மோடி - இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். முன்னதாக பிரதமர் மோடி கூறியதாவது:-
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய வருகை ஒரு வரலாற்று நிகழ்வு. இந்தியாவை பற்றி நன்கு அறிந்தவர் போரிஸ் ஜான்சன். இந்தியா, இங்கிலாந்து இடையேயான நட்புறவை வலுப்படுத்துவதில் போரிஸ் ஜான்சன் முக்கிய பங்காற்றியுள்ளார். வர்த்தக ரீதியான ஒப்பந்தங்களில் இரு தரப்புக்கும் இடையே நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்து முதலீடுகளை இந்தியா வரவேற்கிறது. இங்கிலாந்து - இந்தியாவுடனான உறவை வலுப்படுத்த போரீஸ் ஜான்சன் பல நடவடிக்கை எடுத்துள்ளார். ஆப்கானிஸ்தான் மண்ணை பயங்கரவாதிகள் பயன்படுத்த அனுமதிக்க கூடாது என பிரதமர் மோடி கூறினார்.
தொடர்ந்து இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியதாவது:-
என் கையில் இந்தியன் ஜப் (COVID19 தடுப்பூசி) உள்ளது, அது எனக்கு நன்றாக உதவியது. இந்தியாவுக்கு மிக்க நன்றி. இன்று நாங்கள் அற்புதமான விவாதங்களை நடத்தியுள்ளோம் மற்றும் எல்லா வகையிலும் எங்கள் உறவை பலப்படுத்தியுள்ளோம். இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான கூட்டாண்மை நமது காலத்தின் வரையறுக்கும் நட்புகளில் ஒன்றாகும். உலகளாவிய முன்னேற்றங்கள் குறித்து இருவரும் விவாதித்தோம்.
உக்ரைனில் உடனடிப் போர்நிறுத்தம் மற்றும் போர் பிரச்சினைக்குத் தீர்வுகாண பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தினோம்.
சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பதற்காகன நவீன தொழில் நுட்பத்தை இந்தியாவுக்கு வழங்க தயார். பாதுகாப்புத்துறையில் இந்தியாவுக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்க விரைந்து ஒப்புதல் வழங்கப்படும்.
இந்தியா - இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்.
பாதுகாப்பு துறையில் இந்தியாவுடனான ஒத்துழைப்பு மேலும் வலுப்படுத்தப்படும். தேவை என்றார்.