ஜிக்னேஷ் மேவானி கைது: பாஜகவின் சர்வாதிகாரத்தின் சமீபத்திய சான்று - ராகுல்காந்தி தாக்கு

அசாம் காவல்துறையினரால் நள்ளிரவில் ஜிக்னேஷ் மேவானியை அரசியலமைப்புச் சட்ட விரோதமாக கைது செய்தது பாஜகவின் சர்வாதிகாரத்தின் சமீபத்திய சான்று என ராகுல்காந்தி கூறினார்.

Update: 2022-04-21 09:07 GMT
புதுடெல்லி,

காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானியின் கைது ஜனநாயக மற்றும் அரசியலமைப்புக்கு விரோதமானது என்றும், கருத்து வேறுபாடுகளை நசுக்க முயற்சிப்பதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடியால் உண்மையை சிறையில் அடைக்க முடியாது என்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி  கூறியுள்ளார். 

குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானியை அசாம் காவல்துறை கைது செய்துள்ளது ஜனநாயகமற்ற விதம், அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது மற்றும் அவரை மக்கள் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுத்த மக்களை அவமதிக்கும் செயலாகும் என்று ராகுல் காந்தி தனது  டுவிட்டரில் கூறினார்.

அசாம் காவல்துறையினரால் நள்ளிரவில் ஜிக்னேஷ் மேவானியை சட்டவிரோதமான மற்றும் அரசியலமைப்புச் சட்ட விரோதமாக கைது செய்தது பாஜகவின் சர்வாதிகாரத்தின் சமீபத்திய சான்றாகும் என்று கூறினார்.

மேலும் செய்திகள்