அதிகாரத்தில் இருப்பவர்கள் வன்முறையைத் தூண்டும் முயற்சிகளில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும் - ராஜஸ்தான் முதல்-மந்திரி தாக்கு

அதிகாரத்தில் இருப்பவர்கள் வன்முறையைத் தூண்டும் முயற்சிகளில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும் , அதைக் கண்டிக்க வேண்டும் என ராஜஸ்தான் முதல்-மந்திரி கூறினார்.

Update: 2022-04-20 12:23 GMT
ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

அதிகாரத்தில் இருப்பவர்கள் வன்முறையைத் தூண்டும் முயற்சிகளில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும், அதைக் கண்டிக்க வேண்டும். ஆனால், அதற்கு நேர்மாறாக உள்ளது. 

மாநிலத்தைச் சேர்ந்த எம்.பி.க்களை பிரதமர் அழைத்து, கலவரத்தை உருவாக்கவும், சட்டத்தை மீறவும், பாஜக எம்.பி., கிரோடி மீனா செய்வது போல் மக்களைத் தூண்டவும் கேட்டுக்கொள்கிறார் என்று கேள்விப்பட்டேன் என ராஜஸ்தான் முதல்-மந்திரி  அசோக் கெலாட் கூறியுள்ளார்.

மாநில மக்களின் பிரச்சினைகளுக்காக நான் எப்போதும் குரல் கொடுத்து வருகிறேன். பொதுமக்களின் பிரச்சினைகளுக்காக மட்டுமே போராட்டங்களில் பங்கேற்றுள்ளேன் என பாஜக எம்பி கிரோடி மீனா கூறினார்.

மேலும் செய்திகள்