பாரம்பரிய மருந்துகளுக்கான உலகின் முதல் சர்வதேச மையம் - அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி

பாரம்பரிய மருந்துகளுக்கான உலகின் முதல் சர்வதேச மையத்தை பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

Update: 2022-04-19 12:37 GMT
காந்திநகர்,

மூன்று நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று குஜராத் வந்தார். நேற்று மாலை காந்தி நகரில் பள்ளிகள் கட்டளை மற்றும் கட்டுப்பாடு மையத்தின் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். 

இந்தநிலையில்   காலை பானஸ்காந்தாவில் உள்ள பால்பண்ணையில் 9.30 மணிக்கு பல்வேறு நலத்திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். சில புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய வைத்தியத்துக்கான சர்வதேச மையத்துக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். 

நிகழ்ச்சியில் மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத் மற்றும் உலகசுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் பங்கேற்றார்.

பாரம்பரிய மருந்துகளுக்காக அமைக்கப்படும் முதல் சர்வதேச மையம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை 20 ஆம் தேதி காந்திநகரில் நடைபெறும் சர்வதேச ஆயுஷ் மாநாட்டில் பிரதமர் பங்கேற்று உரை நிகழ்த்துகிறார்.

நாளை பிற்பகல் 3.30 மணிக்கு டாஹோட்டில் பல்வேறு நலத்திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி புதிய திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.

மேலும் செய்திகள்