ஸ்டேட் வங்கி கிளையில் ரூ.11 கோடி நாணயங்கள் மாயமான விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை

ராஜஸ்தானில் ஸ்டேட் வங்கி கிளையில் ரூ.11 கோடி நாணயங்கள் மாயமான விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை தொடங்கியுள்ளது.

Update: 2022-04-18 21:04 GMT
கோப்புப் படம்
புதுடெல்லி,

ராஜஸ்தானில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் மெகந்திபூர் பாலாஜி கிளையில், ரூ.11 கோடி மதிப்பிலான நாணயங்கள் மாயமானது தெரியவந்தது. இது வங்கி அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை கேட்டு பாரத ஸ்டேட் வங்கி சார்பில் மாநில ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டும், இந்த விவகாரத்தை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட்டது. 

இதைத்தொடர்ந்து, இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் தற்போது விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்த சம்பவத்தில் மாநில போலீசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில், விசாரணை தொடங்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்