ஜி.எஸ்.டி. வரியை உயர்த்த மத்திய அரசு திட்டமிடுகிறது: காங்கிரஸ் குற்றச்சாட்டு

சில பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

Update: 2022-04-18 18:55 GMT
கோப்புப்படம்
புதுடெல்லி, 

காங்கிரஸ் தலைமை செய்தித்தொடர்பாளர் ரந்தீப்சிங் சுர்ஜேவாலா நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

மசாலா பொருட்கள், சப்பாத்தி, எண்ணெய், தேயிலை, காபி, சர்க்கரை, இனிப்பு வகைகள் போன்ற பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை, 5 சதவீத அடுக்கில் இருந்து 8 சதவீத அடுக்காக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுபோல், இந்தியர்களை கொள்ளையடிக்க புதிய வழிகளை கண்டுபிடித்துள்ளது. மேலும் நிலக்கரி, பயோ கியாஸ், உரம், உயிர் காக்கும் மருந்துகள் உள்ளிட்ட பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி.யும் உயரும் என்று தெரிகிறது.

பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வு, மக்களின் பட்ஜெட்டை அழித்திருக்கும்போது, வரி உயர்வுக்கு மத்திய அரசு திட்டமிடுகிறது. இந்த கொள்ளையை நிறுத்துங்கள் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்