மத மோதல் குறித்து கூட்டறிக்கை: எதிர்க்கட்சிகளுக்கு பா.ஜனதா கண்டனம்

எதிர்க்கட்சிகளின் இந்த நடவடிக்கைக்கு, பா.ஜனதா கண்டனம் தெரிவித்து உள்ளது.

Update: 2022-04-17 18:08 GMT
Image Courtesy: PTI
புதுடெல்லி, 

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்து வரும் மத மோதல்களை கண்டித்தும், இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், எதிர்க்கட்சிகள் நேற்று  கூட்டறிக்கை வெளியிட்டு இருந்தன. இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா, மு.க.ஸ்டாலின், சரத்பவார் உள்பட 13 எதிர்க்கட்சி தலைவர்கள் கையெழுத்து போட்டு இருந்தனர்.

எதிர்க்கட்சிகளின் இந்த நடவடிக்கைக்கு, பா.ஜனதா கண்டனம் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து கட்சியின் செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா செய்தியாளர்களிடம் கூறுகையில்:-

‘சோனியா காந்தி, நேற்று (நேற்று முன்தினம்) சில எதிர்க்கட்சித் தலைவர்களுடன் சேர்ந்து கடிதம் எழுதிய விதம் கவலையளிக்கிறது. அந்த கடிதத்தில் சித்தாந்தத்தை சோனியா ஜி சுட்டிக்காட்டி இருந்தார். இந்த வன்முறைகளுக்கு பின்னால் எந்த சித்தாந்தம் உள்ளது? கடந்த 70 ஆண்டுகளாக இருக்கும் இந்த ‘சித்தாந்தத்தின்' பெயர் திருப்திபடுத்தும் சித்தாந்தம்தான்’ என்று தெரிவித்தார்.

டெல்லி கலவரம் குறித்து கருத்து தெரிவித்த அவர், இந்த விவகாரத்தில் விசாரணை நடைபெற்று வருவதாகவும், அறிக்கை கிடைக்கும்வரை அனைவரும் காத்திருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மேலும் செய்திகள்