'வன்முறையை நாங்கள் விரும்பவில்லை... ஆனால்...’ - ராஜ் தாக்கரே பரபரப்பு பேச்சு

நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-04-17 08:10 GMT
Image Courtesy: PTI
மும்பை,

மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் கடந்த 13-ம் தேதி நவநிர்மாண் சேனா கட்சியின் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே பங்கேற்றார்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய ராஜ் தாக்கரே, இஸ்லாமிய மத வழிபாட்டு தளமான மசூதியில் இருந்து கூம்பு வடிவ ஒலிப்பெருக்கியை சிவசேனா தலைமையிலான மாநில அரசு மே 3-ம் தேதிக்குள் நீக்கவில்லையெனில் நாங்கள் (நவநிர்மாண் சேனா) மசூதி (இஸ்லாமிய மத வழிபாட்டு தளம்) முன் அனுமன் (இந்து மதக்கடவுள்) பாடலை ஒலிப்பெருக்கி மூலம் ஒலிப்போம். இது சமூக பிரச்சினையே தவிர மத ரீதியிலான பிரச்சினை அல்ல. 

நான் மாநில அரசுக்கு ஒன்றை கூறிக்கொள்கிறேன். இந்த விவகாரத்தில் நாங்கள் பின்வாங்கப்போவதில்லை. உங்களால் (மராட்டிய அரசு) என்ன செய்யமுடியுமோ அதை செய்யுங்கள்’ என்றார். ராஜ்தாக்கரேவின் பேச்சு மராட்டியத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. 

இந்நிலையில், ராஜ் தாக்கரே இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் கூம்பு வடிவ ஒலிப்பெருக்கி, டெல்லி ஜகாங்கீர்பூரி பகுதியில் நடைபெற்ற வன்முறை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு பதிலளித்த ராஜ்தாக்கரே, மராட்டியத்தில் வன்முறையை நாங்கள் விரும்பவில்லை. மத வழிபாட்டில் ஈடுபடுவதை யாரும் எதிர்க்கவில்லை. ஆனால், நீங்கள் (இஸ்லாமியர்கள்) அதிக ஒலி தரும் (கூம்புவடிவ) ஒலிப்பெருக்கியை பயன்படுத்தினீர்கள் என்றால் நாங்களும் அதிக ஒலிதரும் (கூம்புவடிவ) ஒலிப்பெருக்கியை பயன்படுத்துவோம். சட்டத்தை விட மதம் பெரியதல்ல என்பதை இஸ்லாமியர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

டெல்லி ஜஹாங்கீர்பூரியில் நடைபெற்ற சம்பவங்கள் வன்முறை சம்பவங்களுக்கு அதேபோன்ற சமப்வங்கள் மூலமே பதில் கொடுக்கப்படவேண்டும். அதேபோன்று பதில் கொடுக்கப்படவில்லையென்றால் அவர்களுக்கு அது புரியாது’ என்றார்.

இதனிடையே, வரும் 1-ம் தேதி (மே 1) மராட்டியத்தின் அவுரங்காபாத்தில் ராஜ்தாக்கரே தலைமையில் பேரணி நடைபெற உள்ளதாகவும், இதனை தொடர்ந்து அவர் ஜூன் 5-ம் தேதி அயோத்தியாவுக்கு செல்ல உள்ளதாகவும் நவநிர்மாண் சேனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்