டெல்லி காவல்துறைக்கு மத்திய மந்திரி அமித்ஷா அறிவுறுத்தல்

டெல்லி காவல்துறைக்கு மத்திய மந்திரி அமித்ஷா அறிவுறுத்தி உள்ளார்.

Update: 2022-04-17 03:55 GMT
புதுடெல்லி,

டெல்லி ஜஹாங்கீர்புரியில் நேற்று நடைபெற்ற அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது இரு பிரிவினரிடையே மோதல் வெடித்தது. இதில் பலர் படுகாயம் அடைந்தனர்.

இந்த மோதல் குறித்து டெல்லி காவல்துறை ஆணையர் உள்பட உயர் அதிகாரிகளுடன் மத்திய  உள்துறை மந்திரி அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.  தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு அவர் உத்தரவிட்டார்.  இந்த வன்முறை குறித்து விசாரிக்க 10 பேர் கொண்ட குழு அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும்  தகவல்கள் தெரிவிக்கின்றன

இந்நிலையில் டெல்லியில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா  அறிவுறுத்தி உள்ளார். காவல் ஆணையர் ராகேஷ் ஹிஸ்தான மற்றும் சட்டம் ஒழுங்கு சிறப்பு காவல் ஆணையர்  டிபேந்திர பதக் ஆகியோருடன் தொலைபேசிய அவர் ஜஹாங்கீர்புரி கலவரம் குறித்து கேட்டறிந்து, கலவரத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறித்தி உள்ளார்.

மேலும் செய்திகள்