மந்திரி ஈஸ்வரப்பா வீட்டை முற்றுகையிட முயன்ற காங்கிரசார் கைது: போலீசார் லத்தி சார்ஜ்

இன்று உடுப்பி தனியார் தங்கும் விடுதி ஒன்றில் பெலகாவியை சேர்ந்த அரசு பணி குத்தகைதாரரும், பாஜக பிரமுகருமான சந்தோஷ் பாட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Update: 2022-04-12 15:20 GMT
சிமோகா

பாஜக ஆட்சி நடைபெற்று வரும்  கர்நாடகாவில் முதல் மந்திரி பசவராஜ் பொம்மை  அமைச்சரவையில் ஊரக வளர்ச்சித்துறை மந்திரியாக இருப்பவர் ஈஸ்வரப்பா. இவர், அரசு ஒப்பந்தபணியில் தனக்கு 40 சதவீதம் கமிஷனாக வேண்டும் என வலியுறுத்துவதாக கூறி கடிதம் எழுதி வைத்துவிட்டு,  அரசு ஒப்பந்ததாரரான  சந்தோஷ் பாட்டில் என்பவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒப்பந்ததாரர் தற்கொலைக்கு காரணமான மந்திரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில்,  ஈஸ்வராப்பாவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும், இவர் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர்  ஈஸ்வரப்பாவின் அவர்கள் வீட்டை முற்றுகையிட சென்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

அப்போது போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சிலர் காயமடைந்தனர் போலீசார் லேசான தடியடி பிரயோகம் செய்து தொண்டர்களை விரட்டி அடிக்கப்பட்டனர் பின்னர் இவர்கள் போலீஸ் வேனில் ஏற்றி கைது செய்து அழைத்துச் செல்லப்பட்டனர்.

மேலும் செய்திகள்