இந்து-முஸ்லிம் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் -எடியூரப்பா வேண்டுகோள்

கர்நாடகத்தில் இந்து-முஸ்லிம் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று எடியூரப்பா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2022-04-11 16:10 GMT
கோப்புப் படம்
பெங்களூரு, 

கர்நாடகத்தில் இந்து-முஸ்லிம் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று எடியூரப்பா வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் மத பிரச்சினைகளை ஏற்படுத்துவதை சகித்து கொள்ள முடியாது. இந்து-முஸ்லிம் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும். அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துவது சரியல்ல. இந்த விவகாரங்களை இத்துடன் நிறுத்த வேண்டும். 

அவரவர்கள் தங்களின் வேலையை கவனிக்க வேண்டும். முஸ்லிம்களும் அமைதியான மற்றும் நல்ல வாழ்க்கையை வாழ வேண்டும்.கர்நாடகத்தின் வளர்ச்சிக்காக அனைவரும் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும். காங்கிரசுக்கு வேறு வேலை இல்லாததால் விலைவாசி உயர்வை முன்வைத்து போராட்டம் நடத்துகிறது.இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

மேலும் செய்திகள்