இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 861-ஆக சரிவு...!!
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 861 ஆக சரிவை சந்தித்துள்ளது. மேலும் 6 பேர் தொற்றால் பலியாகி உள்ளனர்.
புதுடெல்லி,
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது. அதிலும் கடந்த சில தினங்களாக கொஞ்சம் ஏறுமுகம் கண்டது. நேற்று இந்த நிலை மாறியது. நேற்று முன்தினம் 1,150 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. நேற்று இந்த எண்ணிக்கை 1,054 ஆக சரிவு அடைந்தது.
இந்நிலையில் இன்று புதிதாக 861 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 861 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,30,36,132 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,21,691 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 929 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,25,03,383 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 11,058 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 1,85,74,18,827 பேருக்கு (கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,44,870 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 2,71,211 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 79,41,18,951 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.