உக்ரைன் போர் குருத்தோலை ஞாயிறு பிரார்த்தனையில் போப் பிரான்சிஸ் வேதனை
ஈஸ்டர் பண்டிகையின் முக்கிய நிகழ்வான குருத்தோலை ஞாயிறு நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.
வாடிகன் சிட்டி,
ஈஸ்டர் பண்டிகையின் முக்கிய நிகழ்வான குருத்தோலை ஞாயிறு நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி வாடிகன் நகரில் உள்ள செயின்ட் பீட்டர் பேராலயத்தில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் நேற்று சிறப்பு பிரார்த்தனை நடத்தினார். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மக்கள் கூட்டமின்றி இந்த பிரார்த்தனை நடந்தது. பிரார்த்தனைக்கு பிறகு தேவாலயத்தில் உரையாற்றிய போப் ஆண்டவர் பிரான்சிஸ் உக்ரைன் போர் குறித்து வேதனையுடன் பேசினார். இது குறித்து அவர் கூறியதாவது:-
நாம் வன்முறையை நாடும்போது. நாம் ஏன் உலகில் இருக்கிறோம் என்பதை நாம் மறந்துவிடுகிறோம், இறுதியில் முட்டாள்தனமான கொடூரமான செயல்களைச் செய்கிறோம். போரின் முட்டாள்தனத்தில், கிறிஸ்து மற்றொரு முறை சிலுவையில் அறையப்படுவதை நாம் காண்கிறோம். கணவன் மற்றும் மகன்களின் அநியாய மரணம்; வெடிகுண்டுகளில் இருந்து தப்பிச் செல்லும் அகதிகள்; எதிர்காலத்தை இழக்கும் இளைஞர்கள் ஆகியவையே முட்டள்தனமான போரின் விளைவுகள். எனவே இதனை நிறுத்துங்கள்.
இவ்வாறு போப் ஆண்டவர் பிரான்சிஸ் கூறினார்.