புதுச்சேரி: பீஸ்ட் திரைப்படத்தின் பேனரை நடுக்கடலில் வைத்த விஜய் ரசிகர்கள்...!
புதுச்சேரியில் பீஸ்ட் திரைப்படத்தின் பேனரை விஜய் ரசிகர்கள் நடுக்கடலில் வைத்துள்ளனர்.
புதுச்சேரி,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் 'மாஸ்டர்' திரைப்படத்திற்கு பிறகு நடித்துள்ள திரைப்படம் 'பீஸ்ட்'. இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கி உள்ள இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர்.
பீஸ்ட் திரைப்படம் வருகிற 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. பீஸ்ட் படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் இடம்பெறும் 3 பாடல்கள் வெளியாகி அனைவரையும் கவர்ந்து ஹிட் அடித்துள்ளது.
இந்த நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள விஜய் ரசிகர்கள் “பீஸ்ட் திரைப்படத்தின்” பேனரை நடுக்கடலில் வைத்துள்ளனர். கடலின் நடுவில் உள்ள இரு கட்டைகளுக்கு இடையே பேனரை கட்டி வைத்துள்ளனர். இது, ரசிகர்களிடையே படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. இவற்றின் புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.