இந்தியாவில் கடந்த நிதியாண்டில் மின்சார வாகன விற்பனை 3 மடங்கு உயர்வு

இந்தியாவில் கடந்த நிதியாண்டில் மின்சார வாகன விற்பனை 3 மடங்கு உயர்ந்துள்ளதாக வாகன விற்பனையாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Update: 2022-04-10 15:31 GMT
கோப்புப்படம்
புதுடெல்லி,

2021-22ஆம் நிதியாண்டில் நான்கு லட்சத்து 29 ஆயிரத்து 217 மின்சார வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டிருப்பதாக வாகன விற்பனையாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதுவே 2020-21ஆம் நிதியாண்டில் ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 821 மின்சார வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தன. இவற்றில் அதிகபட்சமாக இருசக்கர வாகனங்களே விற்பனையாகியுள்ளன.

கடந்த ஆண்டில் இரண்டு லட்சத்து 31 ஆயிரத்து 338 மின்சார இருசக்கர வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இருசக்கர மின்சார வாகனங்கள் விற்பனையில் ஹீரோ எலக்ட்ரிக் முதலிடத்திலும், ஒகினாவா இரண்டாம் இடத்திலும், ஆம்பியர் வெயிக்கல்ஸ் மூன்றாம் இடத்திலும், ஏத்தர் எனர்ஜி நான்காம் இடத்திலும் உள்ளன.

நான்கு சக்கர வாகனங்களை பொறுத்தவரை ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 300 மின்சார கார்கள் விற்பனையாகியுள்ளன. மின்சார கார்கள் விற்பனையில் டாடா மோட்டார்ஸ் முதலிடத்திலும், எம்ஜி மோட்டர்ஸ் இரண்டாம் இடத்திலும், மகேந்திரா 3ஆம் இடத்திலும் ஹுண்டாய் நான்காம் இடத்திலும் உள்ளதாக வாகன விற்பனையாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்