சிவசேனா போலி மதச்சார்பற்ற கட்சியாகி உள்ளது- பாஜக விமர்சனம்
சிவசேனா போலி மதச்சார்பற்ற கட்சியாகி உள்ளது என தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
மும்பை,
மாராட்டிய முன்னாள் முதல் மந்திரியும் பாஜக தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
பால் தாக்கரேயை 'ஜனாப்' என குறிப்பிட்டு சிவசேனா கட்சியை சேர்ந்தவர் உருது மொழியில் காலண்டர் அச்சடித்து உள்ளார். சிவசேனா போலி மதச்சாப்பற்ற கட்சியாகி உள்ளது. எனினும் நாங்கள் எந்த மதம் அல்லது அவர்களின் நம்பிக்கைக்கு எதிரானவர்கள் அல்ல.
சரத்பவாரின் வீட்டின் மீது நடந்த தாக்குதலுக்கு சிலர் பா.ஜனதாவை குற்றம்சாட்டுகின்றனர். எல்லா கட்சிகளிலும் எதையாவது சொல்ல மூளையில்லாதவர்கள் இருக்கிறார்கள். பா.ஜனதா முன்னால் இருந்து தான் தாக்கும். இதுபோன்ற செயலில் ஈடுபடாது. சரத்பவார் வீடு நடந்த தாக்குதல் பற்றி ஊடகத்திற்கு தெரிந்து இருக்கிறது. ஆனால் போலீசாருக்கு தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.