உத்தரகாண்டில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.1 ஆக பதிவு
உத்தரகாண்டில் மித அளவில் உணரப்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 4.1 ஆக பதிவாகி உள்ளது.
உத்தரகாசி,
உத்தரகாண்டின் உத்தரகாசி நகரில் இன்று மாலை 4.52 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 4.1 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் டுவிட்டர் பதிவின் வழியே தெரிவித்து உள்ளது.
இந்த நிலநடுக்கம் உத்தரகாசியில் இருந்து வடமேற்கே 30 கி.மீ. தொலைவில் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என்றும் தெரிவித்து உள்ளது. இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.