கொலை குற்றவாளியின் ரூ. 1 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் - உ.பி. அரசு அதிரடி

கொலை, கொள்ளை உள்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளியின் ரூ. 1 கோடி மதிப்புள்ள சொத்துக்களை உத்தரபிரதேச அரசு பறிமுதல் செய்துள்ளது.

Update: 2022-04-08 23:48 GMT
லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் ஷம்லி மாவட்டத்தை சேர்ந்த ரவுடி சஞ்சீவ் ஜீவா மீது கொலை, கொள்ளை உள்பட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளான். சஞ்சீவ் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்போது சஞ்சீவ் கைது செய்யப்பட்டு லக்னோ சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறான்.

இதற்கிடையில், ரவுடி சஞ்சீவ் பலரை மிரட்டி சட்டவிரோதமாக ஷம்லி மாவட்டம் ஆடம்பூர் என்ற பகுதியில் சட்டவிரோதமாக நிலம் வாங்கியுள்ளான். அந்த நிலங்களை தனது உறவினர் பெயர்களில் பதிவு செய்துள்ளான்.

இந்நிலையில், ரவுடி சஞ்சீவ் நிலங்களை சட்டவிரோதமாக வாங்கி தனது உறவினர்கள் பெயரில் பதிவு செய்த நிலத்தை உத்தரபிரதேச அரசு பறிமுதல் செய்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட நிலத்தின் மொத்த மதிப்பு 1 கோடி ரூபாய்க்கும் அதிகம் என அதிகாரிகள் செய்துள்ளனர். 

மேலும் செய்திகள்