ஆந்திரா: அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவமனையில் பணிபுரிய தடை
ஆந்திராவில் அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரிய அதிரடி தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஐதராபாத்,
ஆந்திராவில் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் தனியார் மருத்துவமனை மற்றும் கிளீனிக்கில் பணிபுரிய தடை விதிக்கப்பட்டு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவமனை மற்றும் சுகாதார விடுதிகளில் பணிபுரிந்து வருவதால், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு தரமான சிகிக்கை வழங்கப்படவில்லை என்று புகார்கள் வந்தன.
இந்த நிலையில், ஆந்திர முதல் மந்திரி ஜெகன் கோகன் ரெட்டி ஆலோசனை நடத்தி, அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைகளில் வேலை பார்க்கக்கூடாது என்றும், மீறி பணியாற்றினால், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.