'மன் கி பாத்' நிகழ்ச்சியின் அடுத்த எபிசோடிற்கான கருப்பொருள்கள் குறித்த யோசனைகள் வரவேற்பு..!

முக்கிய கருப்பொருள்கள் மற்றும் சிக்கல்கள் பற்றிய எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு பிரதமர் மோடி மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Update: 2022-04-08 06:02 GMT
கோப்புப் படம் AFP
புதுடெல்லி,

பிரதமர் மோடி 'மன் கி பாத்' என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். மன் கி பாத் நிகழ்ச்சி வருகிற 24-ந்தேதி நடைபெற உள்ளது.

இந்த நிலையில் மன் கி பாத் நிகழ்ச்சியின் அடுத்த எபிசோடிற்கான கருப்பொருள்கள் குறித்த கருத்துகளை அனுப்புமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். முக்கிய கருப்பொருள்கள் மற்றும் சிக்கல்கள் பற்றிய எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு பிரதமர் மோடி மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

கருத்துகளை MyGov, NaMo போன்ற செயலியிலோ அல்லது 1800-11-7800 என்ற எண்ணுக்கு அழைப்பு விடுத்தோ பதிவு செய்யுங்கள் என்று தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்