ஜம்மு காஷ்மீர் வங்கி முறைகேடு: உமர் அப்துல்லாவிடம் அமலாக்கப்பிரிவு விசாரணை
ஜம்மு காஷ்மீர் வங்கி முறைகேடு தொடர்பாக உமர் அப்துல்லாவிடம் அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்தியது.
ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீர் வங்கி, கடன்களை வழங்குவதிலும், வேண்டியவர்களுக்கு பணி நியமனங்கள் செய்வதிலும், சொத்துக்கள் வாங்குவதிலும் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்து பல்வேறு விசாரணை அமைப்புகளால் விசாரணை நடத்தப்படுகிறது. அந்த வகையில் மும்பை பாந்த்ரா குர்லா வளாகத்தில் உள்ள ஜம்மு காஷ்மீர் வங்கி பயன்பாட்டுக்கு அக்ருதி கோல்ட் பில்டர்ஸ் நிறுவனத்திடம் இருந்து 2010-ம் ஆண்டு, சந்தை விலையை விட அதிகவிலைக்கு (ரூ.180 கோடி ) சொத்து வாங்கி உள்ளனர்.
மும்பையை சேர்ந்த இந்த வங்கியின் இயக்குனர் நிஹால் சந்திரகாந்த் கர்வாரே என்பவர் இந்த பேரத்தில் முக்கிய பங்கு வகித்ததாக கூறப்படுகிறது. இதன்மூலம் வங்கிப்பணம் பெருமளவு மோசடி செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த கர்வாரே கைது செய்யப்பட்டுள்ளார். இவருடன் காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி உமர் அப்துல்லா நெருக்கமாக உள்ளார் என்கிற நிலையில், இந்தப் பேரத்தில் உமர் அப்துல்லாவுக்கு தொடர்பு உண்டா என்பது குறித்து மத்திய அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் விசாரிக்க விரும்பி உள்ளது.
இதற்காக அவருக்கு மத்திய அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் சம்மன் அனுப்பியது. அதன் பேரில், உமர் அப்துல்லா டெல்லியில் உள்ள அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் முன்பாக நேற்று ஆஜர் ஆனார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவரது வாக்குமூலத்ைதயும் பதிவு ெசய்தனர். ரம்ஜான் நோன்பு காலத்தில் உமர் அப்துல்லாவை டெல்லிக்கு வரவழைத்து விசாரணை நடத்தியதை அவரது தேசிய மாநாட்டு கட்சி குறைகூறி கண்டனத்ைத பதிவு ெசய்தது.
இதுபற்றி அந்த கட்சிவிடுத்துள்ள அறிக்கையில், “ பா.ஜ.க.வை அர்த்தம் உள்ள வகையில் எதிர்க்கிற எந்தக்கட்சியையும் விட்டு விடுவதில்லை. அமலாக்கப்பிரிவு, சி.பி.ஐ. தேசிய புலனாய்வு முகமை, தேசிய போதைப்பொருள் தடுப்பு முகமை என அனைத்து அமைப்புகளும் அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன” என சாடி உள்ளது.