பரூக் அப்துல்லா சிரீயசாக பேசும்போது, பெண் எம்.பி.யுடன் சசிதரூர் அரட்டை..! டுவிட்டரை கலக்கும் மீம்ஸ்

ஒருபக்கம் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்க, மறுபுறம் சசி தரூர் தன் இருக்கையிருந்து குனிந்து, முன் வரிசையில் அமர்ந்திருந்த சுப்ரியா சுலேவுடன் சுவாரசியமாக பேசிக் கொண்டிருந்தார்.

Update: 2022-04-07 10:02 GMT
புதுடெல்லி, 

காங்கிரஸ் கட்சியின் சசி தரூர் திருவனந்தபுரம் தொகுதி எம்.பியாக உள்ளார். அவர் சர்ச்சைகளில் அடிக்கடி  சிக்கி கொள்பவர். இப்போது அவரை வைத்து புதிதாக ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது.

சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பாராமதி தொகுதி எம்.பியான சுப்ரியா சுலேவுடன், டாக்டர் சசி தரூர் சுவாரசியமாக  பேசிக் கொண்டிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஒருபுறம்  லோக் சபாவில் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்க, மறுபுறம் சசி தரூர் தன் இருக்கையில் அமர்ந்து கொண்டே, முன்னோக்கி குனிந்து, அவருக்கு முன் வரிசையில் அமர்ந்திருந்த சுப்ரியா சுலேவுடன் சுவாரசியமாக எதையோ பேசிக் கொண்டிருந்தார். அவரிடம் உரையாட வசதியாக, சுப்ரியா சுலே பின்பக்கமாக திரும்பி நின்று கொண்டு பேசினர். சசிதரூர் அவர் பேசுவதை கேட்டு ரசித்துக் கொண்டிருந்தார்.

இதை சற்றும் கவனிக்காத மூத்த தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியுமான பரூக் அப்துல்லா, மக்களவையில் தொடர்ந்து தனது உரையை நிகழ்த்தி கொண்டிருந்தார். 

ஏனென்றால், அவருக்கு பின் இருக்கையில் தான் இவ்வளவு விஷயங்களும் அரங்கேறி கொண்டிருந்தன. அதனால் அவர் அவற்றை பார்க்க வாய்ப்பில்லை.

அதில் கூடுதல் சுவாரசியம் என்னவெனில், வீடியோவை வெளியிட்ட குறும்புக்கார நெட்டிசன் பின்னணி இசையாக  ‘புஷ்பா’ படத்தின்  ‘ஸ்ரீவள்ளி’ பாடலை சேர்த்து, டுவிட்டரில் அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். 

உண்மையில், ரஷியா உக்ரைன் இடையேயான போர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் மக்களவையில் விவாதம் நடைபெற்று கொண்டிருக்கும் போது , இந்த ருசிகர சம்பவம் நடந்தது. வீடியோவை அதிலிருந்து கட் செய்து, ஆடியோவை சேர்த்து, அழகாக எடிட்டிங் செய்து வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

சும்மா இருப்பார்களா நம்ம ஊர் மக்கள். உடனே மீம்ஸ்களை போட்டுத் தாக்க துவங்கி விட்டனர். இப்போது சமூக வலைதளங்களில் இந்த வீடியோ தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்