“மேகதாது விவகாரம் சட்டம், ஒழுங்கு பிரச்சினையாக மாற வாய்ப்பு” - அன்புமணி ராமதாஸ் எம்.பி.
மேகதாது விவகாரம் சட்டம், ஒழுங்கி பிரச்சினையாக மாற வாய்ப்புள்ளதாக நாடாளுமன்றத்தில் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தெரிவித்தார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மாநிலங்களவையில் இன்று பூஜ்ய நேரத்தின் போது, மேகதாது விவகாரம் குறித்து பா.ம.க. எம்.பி. அன்புமணி ராமதாஸ் பேசினார். அப்போது அவர், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு சட்டப்பூர்வ அனுமதி பெறவில்லை என்று குற்றம் சாட்டினார்.
மேலும் இரு மாநில மக்களும் பல நூற்றாண்டுகளாக சகோதரத்துவத்துடன் இருந்து வருவதாகவும், காவிரி விவகாரம் உணர்வுப்பூர்வமானது என்பதால், அது சட்டம், ஒழுங்கு பிரச்சினையாக மாறுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
இதனிடையே அன்புமணி ராமதாஸ் பேச்சுக்கு கர்நாடக எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கர்நாடக அரசு என்ற வார்த்தையை பயன்படுத்த மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு மறுப்பு தெரிவித்தார்.