ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை

விக்கிரமசிங்கபுரத்தில் ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-04-04 22:10 GMT
விக்கிரமசிங்கபுரம்:
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே சிவந்திபுரம் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் அந்தோணி எட்வர்டு மர்பி (வயது 56). முன்னாள் கணினி ஆசிரியரான இவர் தற்போது ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இதில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டதால் மனமுடைந்த நிலையில் இருந்தார். இந்த நிலையில் நேற்று காலையில் அந்தோணி எட்வர்டு மர்பி தனது வீட்டின் மாடியில் உள்ள அறையில் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், விக்கிரமசிங்கபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்த அந்தோணி எட்வர்டு மர்பியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த அந்தோணி எட்வர்டு மர்பிக்கு மரியநேசம் (55) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மரியநேசம் ஆசிரியையாக உள்ளார். 

மேலும் செய்திகள்