இஸ்ரேல் பிரதமர் பென்னட்டுடன் மோடி பேச்சு..!!
இஸ்ரேல் பிரதமர் பென்னட்டுடன், பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தினார்.
புதுடெல்லி,
பிரதமர் மோடி நேற்று இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட்டுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது இரு நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு ஒத்துழைப்பு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து இருவரும் விவாதித்தனர். மேலும் உக்ரைன் விவகாரம் உள்ளிட்ட புவி அரசியல் சார்ந்த விவகாரங்கள் குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
இந்த உரையாடலின்போது, இஸ்ரேல் பிரதமர் கொரோனா தொற்றில் இருந்து விரைவில் மீண்டு வர பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். அத்துடன் இஸ்ரேலில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாகுதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கலும் தெரிவித்தார்.
இஸ்ரேல் பிரதமரை இந்தியாவில் விரைவில் வரவேற்பதற்கு ஆர்வமுடன் இருப்பதாகவும் மோடி தனது உரையாடலின்போது கூறியதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.