மத்தியப்பிரதேசம்: டிராக்டர் மீது கார் மோதியதில் நீதிபதி உயிரிழப்பு!

மத்தியப்பிரதேசத்தில் டிராக்டர் மீது கார் மோதிய விபத்தில் நீதிபதி உயிரிழந்தார்.

Update: 2022-04-03 07:51 GMT
கோப்புப்படம்
போபால்,

மத்தியப்பிரதேச மாநிலத்தில் சாலையில் சத்தர்பூர் மாவட்ட நீதிபதி இருவர்  சாகர்-கான்பூர் சாலையில் சத்தர்பூர் நோக்கி சென்றுகொண்டிருந்தனர். 

மட்குவான் காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட பாரா சௌகி அருகே சென்றுகொண்டிருந்தபோது, திடீரென கார், நின்றுகொண்டிருந்த டிராக்டர் மீது மோதியது. இந்த பயங்கர விபத்தில் ரிஷி திவாரி என்ற நீதிபதி சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தார். சக நீதிபதியான மத்தோரியா மற்றும் காரை ஓட்டி வந்த ராம் தினகர் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

நேற்று இரவு 8 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக கூறிய போலீசார், விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்