உக்ரைன் விவகாரத்தில் இந்தியா மத்தியஸ்தம் செய்ய முடியுமா? ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி பதில்

உக்ரைன் - ரஷியா இடையே இந்தியா மத்தியஸ்தராக செயல்பட முடியும் என்று ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

Update: 2022-04-01 12:29 GMT
புதுடெல்லி,

ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி  செர்கே லாவ்ரோவ் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ரஷியா - உக்ரைன் போர் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், ரஷிய வெளியுறவுத்துறை மந்திரியின்  இந்திய சுற்றுப்பயணம் சர்வதேச அளவில் முக்கியத்தும் பெற்றுள்ளது. 

2 நாள் பயணமாக  இந்தியா வந்துள்ள ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி இன்று பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார்.  பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி செர்கே லாவ்ரோவிட,  உக்ரைன் - ரஷியா போர் விவகாரத்தில் இந்தியா மத்தியஸ்தம் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் கேள்வி எழுப்பியது. 

இதற்கு பதிலளித்த செர்கே லாவ்ரோ,  ”இந்தியா மிகவும் முக்கியமான நாடு. பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் ஒரு பங்கை ஆற்ற இந்தியா நினைத்தால்,  சர்வதேச பிரச்சனைகளில் நியாயமான செயல்முறையுடன்அதுபோன்ற நடைமுறைகளுக்கு ஆதரவு  இந்தியா  அளிக்கலாம்” என்றார். 

மேலும் செய்திகள்