ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா வழங்க கோரிய மனு: டெல்லி ஐகோர்ட்டு மறுப்பு

சமூக ஆர்வலர் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்க டெல்லி ஐகோர்ட்டு மறுத்துவிட்டது.

Update: 2022-03-31 15:39 GMT
புதுடெல்லி,

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவிற்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும் எனக்கோரி சமூக ஆர்வலரான ராகேஷ் என்பவர் டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனுவை தாக்கல் செய்தார். 

மனுவை பரிசீலித்த நீதிபதிகள், கோரிக்கைகள் தொடர்பாக அரசிடம் முறையிட வேண்டும் என்றும் இந்த விவகாரத்தில் ஐகோர்ட்டு தலையிட விரும்புவதில்லை என்று கூறி மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்துவிட்டனர்.

மேலும், மனுவை திரும்ப பெற வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், மனுவை திரும்ப பெறாவிட்டால், அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுவை திரும்ப பெற அனுமதி கோரினார். அதற்கு அனுமதி அளித்த நீதிபதிகள் பொதுநல மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்