மராட்டியத்தில் வருகிற ஏப்ரல் 2 முதல் முகக்கவசம் அணிவது கட்டாயமல்ல..!

கொரோனா கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்குவதாக மராட்டிய அரசு அறிவித்துள்ளது.

Update: 2022-03-31 13:43 GMT
கோப்புப் படம் PTI
மும்பை,

மராட்டிய மாநிலத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை நீக்குவது தொடர்பாக இன்று நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்குவதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மராட்டிய அரசு அறிவித்துள்ளது.

மராட்டிய மாநிலத்தில் வரும் ஏப்ரல் 2-ந்தேதி முதல் முகக்கவசம் அணிவது கட்டாயமல்ல என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே கூறியுள்ளார். மராட்டியத்தில் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக தொற்றுநோய் சட்டம் மற்றும் பேரிடர் சட்டம் அமலில் இருந்ததாகவும் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இவை ரத்து செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இதன் மூலம் பயணங்களுக்கு கட்டாய தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும், முக கவசம் அணிதல் போன்ற அனைத்து கட்டுப்பாடுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டாலும் மக்கள் கவனக்குறைவாக செயல்பட வேண்டாமென்றும் முக கவசம் அணிவதை விருப்பத்தின் பேரில் தொடர வேண்டும் என்றும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் ராஜேஷ் தோபே கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்