பீகார் சட்டசபையில் 8 எம்.எல்.ஏக்கள் குண்டுகட்டாக வெளியேற்றம்

சபை காவலர்கள் 8 எம்எல்ஏக்களையும் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று வெளியேற்றினர்.

Update: 2022-03-31 10:00 GMT
பாட்னா,

பீகார் சட்டசபையில்  அமளியில் ஈடுபட்ட சிபிஐ எம்எல் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் 8 பேரை அவைக் காவலர்கள் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று அவையை விட்டு வெளியேற்றினர். 

பீகார் சட்டமன்றக் கூட்டத்தில் பேசிய சிபிஐஎம்எல் உறுப்பினர்கள் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலை மோசமடைந்துள்ளதாகக் குற்றஞ்சாட்டினர்.

சபாநாயகர் அவர்களை அமரச் சொன்ன பிறகும் தொடர்ந்து முழக்கமிட்டதால் அவர்களை வெளியேற்றப் சபாநாயகர் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து சபை காவலர்கள்  8 எம்எல்ஏக்களையும்  குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று வெளியேற்றினர்.  

மேலும் செய்திகள்