பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி நின்ற அரசு பஸ்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 50 பயணிகள்...!

சிக்கமகளூரு அருகே பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி அரசு பஸ் நின்றதால் 50 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Update: 2022-03-31 08:55 GMT
பெங்களூரு,

கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் கலசா ஓரநாடுவிலிருந்து பெங்களூரு நோக்கி இன்று ஒரு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ் பொழுது கலாசா பாலூர் பகுதில் வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி ஓடியது. 

அப்போது அங்கு இருந்த  ஒரு பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி நின்றது. பாலத்தின் தடுப்பு சுவரில் மோதிய பஸ், கீழே விழாமல் நின்றதல் பஸ்சில் இருந்த 50 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

இதனை அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பஸ்சில் இருந்த பயணிகளை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இவர்களில் ஒரு சிலருக்கு மட்டும் காயம் ஏற்பட்டதால், அவரைகளை மட்டும் மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். மற்றவர்களை மாற்று பஸ் ஏற்பாடு செய்து அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் கூறுகையில்.

கட்டுப்பாட்டை இழந்து சாலையில் ஓடிய அரசு பஸ் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி நின்று உள்ளது. நல்ல வேலையாக பஸ் கீழே விழாமல் இருந்தால் பஸ்சில் இருந்த பயணிகள் உயிர்தப்பி உள்ளனர். இந்த விபத்து தொடர்பாக பஸ் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்