ஓய்வு பெறும் எம்.பிக்கள் அனுபவத்தை நாட்டின் வளர்ச்சிக்காக பயன்படுத்த வேண்டும் - பிரதமர் மோடி

பதவிக்காலம் முடியும் எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2022-03-31 06:26 GMT
Image Courtesy: ANI
புதுடெல்லி, 

நியமன எம்.பிக்கள் 7 பேர் உள்பட 74 எம்.பிக்களின் பதவிக்காலம் ஜூலைக்குள் நிறைவுபெறுகிறது. 

இந்தநிலையில்  பதவிக்காலம் முடியும் 72 மாநிலங்களவை எம்பிக்களை மக்களவையில் பிரதமர் மோடி வாழ்த்தி பேசினார்.  அப்போது அவர் பேசியதாவது:-

ஓய்வு பெறும் உறுப்பினர்கள், தங்கள் அனுபவத்தை நாட்டின் வளர்ச்சிக்காக பயன்படுத்த வேண்டும்.  அனுபவம் வாய்ந்த உறுப்பினர்களின் இடத்தை தற்போதைய எம்பிக்கள் பூர்த்தி செய்ய வேண்டும். மூத்த உறுப்பினர்களிடம் இருந்து கற்று கொண்டவற்றை நாமும் பின்பற்றுவோம்.  

பதவிக்காலம் முடியும் நமது எம்பிக்களுக்கு நிறைய அனுபவம் இருக்கும்.  சில நேரங்களில் கல்வி அறிவை விட அனுபவ அறிவு வலிமை மிக்கதாக இருக்கும். 
பதவிக்காலத்தை நிறைவு செய்யும் எம்.பிக்கள் மீண்டும் எம்.பியாக அவைக்கு வர வேண்டும் என்றார்.

ப.சிதம்பரம், நிர்மலா சீதாராமன், ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட எம்பிக்களை பிரதமர் மோடி பாராட்டினார். 

மேலும் செய்திகள்