அசாமில் கடந்த 24 மணி நேரத்தில் புதிய கொரோனா பாதிப்புகள் இல்லை

அசாம் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கொரோனா பாதிப்புகள் எதுவும் பதிவாகவில்லை.

Update: 2022-03-30 20:50 GMT
திஸ்பூர்,

அசாம் மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கொரோனா எதுவும் பாதிப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அசாமில் இதுவரை பதிவான மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 7,24,196 ஆக உள்ளது.

அதே போல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. அங்கு இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக மொத்தம் 6,639 பேர் உயிரிழந்துள்ளனர். அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 2 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

இதன் மூலம் அசாமில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7,16,203 ஆக உயர்ந்துள்ளது. அசாமில் தற்போது 7 பேர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருவதாக அந்த மாநிலத்தின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

மேலும் செய்திகள்