2 நாள் பயணமாக ரஷிய மந்திரி இன்று டெல்லி வருகிறார்
2 நாள் பயணமாக ரஷிய மந்திரி செர்ஜி லாவ்ரோவ் இன்று டெல்லி வருகிறார்.
புதுடெல்லி,
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் ஆசியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
சீனாவில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், அந்த பயணத்தை முடித்துக்கொண்டு 2 நாள் அரசுமுறை பயணமாக இன்று (31-ந் தேதி) டெல்லி வருகிறார். இதை மத்திய வெளியுறவு அமைச்சம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
அமெரிக்க துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தலீப் சிங், இங்கிலாந்து வெளியுறவு மந்திரி லிஸ் டிரஸ் ஆகியோரின் இந்திய பயணத்துக்கு மத்தியில், ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் இந்திய பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.