தேசிய நெடுஞ்சாலைகளில் 28 இடங்களில் போர் விமானங்களை தரையிறக்க முடியும்: மத்திய அரசு

நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 28 இடங்கள் போர் விமானங்களை தரையிறக்க கூடிய இடங்களாக கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Update: 2022-03-30 16:27 GMT
புதுடெல்லி,

நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் போர் விமானங்களை 28 இடங்களில் அவசர காலத்திற்கு  தரையிறக்க முடியும் என்று   மத்திய  சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அசாமில் 5 இடங்களிலும், மேற்கு வங்காளத்தில் 4 இடங்களும், ஆந்திரா, குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் 3 இடங்களிலும் பீகார், அரியானா, ஜம்மு காஷ்மீர், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் 2 இடங்களிலும் பஞ்சாப், உத்தரபிரதேசத்தில் ஒரு இடத்திலும் போர் விமானங்களை அவசர காலத்தில் தேசிய நெடுஞ்சாலையில் தரையிறக்க முடியும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சாலைபோக்குவரத்து அமைச்சகத்தின் அறிக்கையை எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய மந்திரி நிதின் கட்காரி தாக்கல் செய்தார். 

மேலும் செய்திகள்