காரில் திடீர் தீ - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பெண்..!
மங்களூரு பகுதியில் காரில் திடீரென தீ பற்றிய நிலையில், காரை ஓட்டிய பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
மங்களூரு:
கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள சக்தி நகர் பகுதியில் பெண் ஒருவர் நேற்று இரவு ஷிப்ட் கார் ஒன்றை ஓட்டிக்கொண்டு சென்றபோது திடீரென என்ஜின் பகுதியில் புகை வந்தது.
உடனடியாக அவர் இறங்கிய சில நொடிகளில் காரின் என்ஜின் தீ பிடித்தது. பின்னர் தீ பரவி கார் முழுவதும் எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து பாண்டேஷ்வர் பகுதியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இருப்பினும் கார் முழுமையாக எரிந்தது. இது சம்பந்தமாக மங்களூர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மங்களூரு: காரில் திடீர் தீ அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பெண் pic.twitter.com/2ej6fhHsI2
— DailyThanthi (@dinathanthi) March 30, 2022